தோழர் சேகுவாரா திரைப்பட விமர்சனம்
அனீஸ் எட்மண்ட் பிரபு தயாரிப்பில் அலெக்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தோழர் சேகுவேரா. சத்யராஜ், மொட்ட ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் ,அனீஸ் எட்மாண்ட் பிரபு ,கூல் சுரேஷ் ,ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் அலெக்ஸ் படத்தை இயக்கியதுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
எதார்த்தமான திரைக்கதை சாதி ரீதியாக ஒடுக்கப்படும் மக்கள் படும் இன்னல்கள்M, அவர்களுக்கு எதிராக செயல்படும் சக்திகள் குறித்து பேசுகிறது இந்த திரைப்படம்.
ஒரு ஏழை மாணவனின் படிப்பு கனவில் இந்த சமூகம் எப்படி எல்லாம் மண்ணை அள்ளி போடுகிறது என்ன பிரச்சனை எல்லாம் அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர்.
படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து திரைத்துறையில் கால் பதித்திருக்கிறார் அனீஸ். அனுபவ நடிகர் சத்யராஜ் யதார்த்தமாக படத்தில் வாழ்ந்திருக்கிறார். காரணம் அவருக்கு பிடித்த கதை களம் இது. இந்தப் படத்தில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வெட்டுகளைப் போட்டிருக்கிறது சென்சார்.
அண்ணாதுரை என்று நாஞ்சில் சம்பத்திற்கு பெயர் வைத்ததால் அதைக் கூட வெட்டி எறிந்து இருக்கிறது சென்சார்.
அண்ணா துரை மீது இன்னும் சங்கிகளுக்கு உள்ள அச்சத்தை சென்சார் போர்டு வாயிலாக காட்டியிருக்கிறார்கள். பூணூல் போட்ட பிராமணரை வில்லனாக போடக்கூடாது என்கிற புது எழுதப்படாத உத்தரவையும் சென்சார் இந்த படத்திற்காக செய்திருக்கிறது.
சென்சாரில் உள்ளவர்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தால் இந்த காலகட்டத்தில் இதை செய்திருப்பார்கள் என்பது உண்மையிலேயே ஆகப்பெரும் காமெடியாக தான் பார்க்கப்படுகிறது ஏனென்றால் ஓ டி டி சென்சார் இல்லை, youtube சென்சார் இல்லை ,ஃபேஸ்புக்கில் சென்சார் இல்லை,நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் இந்த சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது, என்பது சென்சார் அதிகாரிகளுக்கு ஒரு கூடுதல் தகவலாக பதிவிட வேண்டி இருக்கிறது.
இது எப்படியோ ஒரு சிறு படம் சிறப்பான படமாக வந்திருக்கிறது. கொடுக்கும் பணத்திற்கு பங்கம் வராது. தேவையான கருத்துக்கள் இதில் பொழுது போக்காக விதைக்கப்பட்டு இருக்கிறது. இயக்குனருக்கு முதல் படம் என்பது தெரியவில்லை. வாழ்த்துக்கள் தோழர் சேகுவேரா டீம்